Vijay Armstrong's profile

'PUGAIPADAM' (stills from the movie)

'Pugaipadam'

பசுமையான கொடைக்கானலின் மடியில் அமைந்த கல்லூரியில் பயிலும் ஏழு மாணவர்களின் கல்லூரிக்காலத்தை இந்தப்படம் விவரிக்கிறது. நான்கு ஆண்கள் மூன்று பெண்கள். இவர்களின் நட்பு,காதல் பற்றியான ஒரு பகிர்வு இந்தப்படம்.

இதன் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பசுமையை முடிந்தவரை கொண்டுவர முயன்றிருக்கிறேன். மென்மையான ஒளிகளை பயன்படுத்தி இருக்கிறேன்.  

காட்சிப்படுத்துதல்,எடிட்டிங்,இசை,சிறப்பு சப்தம் என்று எதிலும் இன்றைய நவின திரைப்படங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப கதைச்சொல்லல்(Camera Shake, Zooming, Fast Cut, Swish Pan, Flash Sounds) முறையைப் பயன்படுத்தவில்லை.

ஒரு மென்மையான கதை அதன் போக்கில் நெகிழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது. இது எனக்கும் இயக்குனருக்கும் முதல் படம். முதல் முயற்சி. முதல் முயற்சிக்கே உரிய எல்லா சாத்தியங்களையும் இந்தப்படம் உட்கொண்டுள்ளது. 

இந்தப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் கொடைக்கானலின் இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. மாலை அந்தி நேரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

Super 16mm தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டப் படம். அந்த தொழில்நுட்பத்தின் குறைபாடுகளான 'Low Resolution, Grains' போன்றவை சில இடங்களில் நான் விரும்பதகாத பிம்பங்களைக் கொடுத்துள்ளது.

இதுவரை தமிழில் வெளிவந்த S16 படங்கள் யாவும்(சுப்பரமணியபுரம்,மாயாண்டி குடும்பத்தார்,பசங்க..), வெய்யில் பிரதேசங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமே குளிர்பிரதேசமும் குறைந்த வெளிச்சமும் கொண்ட கொடைக்கானலில் எடுக்கப்பட்டப் படம்.

மொத்ததில் ஒரு இயல்பான நெகிழ்வான படமாக கொடுக்க முயன்றிருக்கிறோம். ஒளிப்பதிவும் அதை மனதில் கொண்டே செய்யப்பட்டிருக்கிறது. 
'PUGAIPADAM' (stills from the movie)
Published:

'PUGAIPADAM' (stills from the movie)

Images from the film 'Pugaipadam'. Cinematography my me - Vijay Armstrong

Published:

Creative Fields